×

பெரம்பலூர் அருகே பொங்கல் பாத்திரம் தருவதாக ஏமாற்றிய பாஜக நிர்வாகிகள்: பெண்கள் ஆவேசம்

பெரம்பலூர்: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர் சார்பில் சமத்துவ பொங்கலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பாஜக சார்பில் நேற்று பொங்கல் விழா நடந்தது. குரும்பலூர் சிவன் கோயில் முன்பு தலா 6 செங்கல்களை, இரண்டு இரண்டாக கற்களாக முக்கோண வடிவில் அடுப்பு போல் வைத்து பொங்கல் சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு புதிய சில்வர் பாத்திரம், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை தரப்படும் எனக் கூறப்பட்டது.

ஆனால் பாதி பெண்களுக்கு மட்டுமே பொங்கல் சமைக்க சில்வர் பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. மீதி பேருக்கு பாத்திரம் வழங்கவில்லை. மேலும் பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் மட்டும் தனித்தனியாக வழங்கப்பட்டது. பாத்திரம் வழங்காததால் செங்கற்களால் தற்காலிக அடுப்பு வைத்து பொங்கல் சமைக்க காத்திருந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதனால் அவர்கள், விழாவுக்கு ஏற்பாடு செய்த பாஜக கட்சியின் ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளான கார்த்திக், அன்பழகன் உள்ளிட்டோரிடம் ஆவேசத்துடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அந்த பெண்கள் பொங்கல் வைக்காமல் வீடுகளுக்கு திரும்பினர்.

The post பெரம்பலூர் அருகே பொங்கல் பாத்திரம் தருவதாக ஏமாற்றிய பாஜக நிர்வாகிகள்: பெண்கள் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Pongal ,Perambalur ,Tamil Nadu ,Samatthu Pongal ,Pongal festival ,Kurumbalur ,Perambalur district ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...